பா.சத்தியவேல் .
பட்டதாரி கணித ஆசிரியர்.
ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி பொன்பத்தி. விழுப்புரம் மாவட்டம். இன்று என்னுடைய கற்பித்தல் பணிகள் பற்றி தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி பொன்பத்தி. விழுப்புரம் மாவட்டம். இன்று என்னுடைய கற்பித்தல் பணிகள் பற்றி தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.
மாணவர்களுக்கு கல்வியின் மேல் ஆர்வம் இருந்தால் மட்டுமே கற்றல் சிறப்பாக அமையும். மாணவர்களை உற்று கவனிக்கும் போது அவர்கள் மனதில் சினிமா பாடல்கள் ஆழப் பதிந்திருப்பதையும், சினிமா பாடல்களை அடிக்கடி பாடுவதையும் கவனித்தேன். இவற்றை மாற்ற எண்ணி பாடக்கருத்துக்களை பாடல்களாக எழுதி ஒவ்வொரு பாடத்தையும் பாடல் மூலம் பாடிக்காட்டி பாட வைத்தேன். இச்செயல்பாடு மாணவர்ளின் கற்றலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மாணவர்களின் பெற்றோர்கள் பலரும் என்னை நேரில் சந்தித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
3.இடைநிலை ஆசிரியராக இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றபோது பெரும் ஆவலோடு பெரிய பெரிய கணக்குகளை கற்றுத்தர போகிறோம். நாம் படித்த அனைத்தையும் கற்றுதரலாம் என சென்ற போது, மாணவர்களுக்கு அடிப்படை கணக்குகளில் போதிய அடைவு இல்லாமையை கண்டு
( ஒரு சில மாணவர்கள்) திரும்பவும் கூட்டல், கழித்தலா... என வியக்க வைத்தது. சரி அடித்தளத்தை அருமையாக அமைபோம் என எண்ணி Educational Softwares மூலம் கணித அடிப்படை செயல்களை செய்ய வைத்தேன். ஒவ்வொரு வாரமும் வெள்ளி கிழமைகளில் புதிய புதிய Software மூலம் இச்செயலினை தொடர்ந்தோம். இவை எதிர்பாத்ததைவிட அதிக பலனை தந்தது. நிலைத்த அறிவுடனும் தன்னம்பிக்கையையுடனும் கணிதம் கற்று வருகின்றனர் எம்பள்ளி மாணவர்கள்.

4.யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற வாக்கின்படி
எம்பள்ளி மாணவர்கள் Educational Software மூலம் கற்றுக்கொண்டதை எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள பள்ளிகளுக்கு கற்றுதர தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலர்கள் அனுமதியுடன் ஒவ்வொரு வாரமும் ஐந்து ஐந்து மாணவர்கள் என்ற வீதத்தில் ஐந்து Laptops எடுத்துக்கொண்டு Auto Rickshaw மூலம் மாணவர்களை அழைத்துச் சென்று அருகில் உள்ள பள்ளிகளுக்கு Educational software மூலம் கற்று கொடுத்து வருகிறோம். நாங்கள் செல்ல இயலாத தொலைதூர பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் மூலம் CDகளை கொடுத்து எவ்வாறு பயன்படுத்துவது என பயிற்சி அளித்து அவற்றை பயன்படுத்தச் செய்து வருகிறோம். இவற்றை எங்கள் பள்ளி முகநூலில் பகிர்ந்த போது அவற்றை விரும்பி கேட்ட ஆசிரிய நண்பர்களுக்கு Courier மூலம் CDகளை அனுப்பி வருகிறோம். திருவண்ணாமலை மாவட்ட ஆசிரியர்களுக்கு ICT பயிற்சி அளித்த போது அவர்கள் அனைவருக்கும் CD வழங்கப்பட்டு பயன்படுத்த செய்து வருகிறோம்.

5.கணினியின் உதவியுடன் கற்றிலில் ஆர்வத்தை ஏற்படுத்திய பின் செயல்பாடுகள் மூலம் கற்பித்தலை ஆரம்பித்தேன். கணிதத்தை கரும்பலகையில் மட்டுமின்றி விளையாட்டு மைதானத்திலும் கற்றுத்தர முடியும் என்ற நோக்கில் விளையாட்டு திடலை அதிகம் பயன்படுத்த தொடங்கினேன். கோல மாவினைக்கொண்டு எண்கோடுகள் வரைந்து எண்ணியலில் பல கடினமான கணக்குகளையும் எளிமையாக விளையாடிக் கொண்டே கற்கின்றனர்.
6.அளவைகள் பாடத்தில் சுற்றளவு மற்றும் பரப்பளவு காண விளையாட்டு திடலின் ஓரத்தில் வயல்கள் அமைத்து ஒவ்வொரு மாணவரையும் அளந்து அவற்றின் பரப்பளவையும் சுற்றளவையும் அறிந்து கற்ற பிறகு கிராம நிர்வாக அலுவலரை அழைத்து அன்றாட வாழ்க்கையில் அவற்றின் பயன்பாடுகள் பற்றி கூறச் செய்தோம். பிறகு வீட்டில் உள்ள பொருட்கள், அன்றாடம் காணும் பொருட்களை எப்போதும் அளந்து பார்ப்பதாக பெற்றோர்கள் கூறும்போது மனம் மகிழத்தான் செய்கிறது.
7.முக்கோணங்களின் வகைகள் பற்றி நடத்தும்போது தச்சர்களின் தச்சுக்கூடம் போல் இருக்கும் வகுப்பறை. மரத்தால் ஆன ரீப்பர் பட்டைகள், ஆணிகள் இவற்றைக்கொண்டு பலவகைகளில் முக்கோணம் அமைத்து அவற்றின் வகைகளையும், பண்புகளையும் மாணவர்களே அறியும் வகையில் வழிகாட்டுவதன் மூலம் 6 வகையான முக்கோணங்கள் பற்றிய அறிவை பெற்று முக்கோணவியல் பாடத்தை முழுவதும் கற்கக்கூடிய அளவிற்கு தங்களின் திறமைகளை வளர்த்து வருகின்றனர்.
8.நாற்கர குடும்பங்கள் பற்றி தெரிந்துகொள்ள எட்டாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு தெருக்கூத்து மூலம் நாற்கர குடும்ப உறுப்பினர்களை ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பித்தல். இது ஒவ்வொரு ஆண்டும் புதிய பொலிவுடன் அரங்கேறி வருகிறது.
9.சதவீதம், தள்ளுபடி போன்றவற்றை கற்கும்போது மாதிரி துணிக்கடைகள் அமைத்து பெற்றோர்களை வரவழைத்து துணிகளை வாங்கச் செய்து சதவீதம், தள்ளுபடி ஆகியவற்றை சிறப்பாக மாணவர்கள் மூலம் செய்து வருகிறோம். இதேபோல் இலாபம், நட்டம் காண காய்கறி கடைகள் அமைத்து சில்லறை வியாபாரம், மொத்த வியாபாரம் மூலம் இலாம், நட்டம் காணச் செய்வது பெற்றோர்களுக்கு கூறும் போது தங்கள் பிள்ளைகளின் திறமைகளை அறிந்து பள்ளியுடன் இணைத்து பெற்றோர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
10.தனிவட்டி, கூட்டுவட்டி போன்ற பலவகையான வட்டிகளை கணக்கிட மாதிரி வங்கிகsள் அமைத்து Laptop உதவியுடன் SBI, INDIAN BANK, ICICI BANK போன்ற பல வங்கிகள் அமைத்து வெவ்வேறான வட்டிவீதங்களில் Car loan,
Home loan, business loan போன்ற Loanகள் வழங்கச் செய்வதன் மூலம் வட்டி என்றால் என்னவென்றே தெரியாத வயதில் பல வகையான வட்டிகளை மகிழ்வுடன் கற்றுவரும் மாணவர்களின் தன்னம்பிக்கையும், தன்னார்வமும் என்னை மேலும் செயல்பட தூண்டுகிறது.
15.மாணவர்களின் பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள், VEC உறுப்பினர்கள், PTA உறுப்பினர்கள், பள்ளி தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் என அனைவரின் ஒத்துழைப்புடன் எங்கள் பள்ளியை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்கிறோம். இந்த ஆண்டிற்குள்
20 கணினிகள் கொண்ட SMART CLASS அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
இதுவரை எனது
15 அம்ச செயல்பாடுகளை பொறுமையாக படித்த நண்பர்களுக்கும், எழுத வாய்ப்பளித்த உமா அக்கா அவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி
20 கணினிகள் கொண்ட SMART CLASS அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம்.
இதுவரை எனது
15 அம்ச செயல்பாடுகளை பொறுமையாக படித்த நண்பர்களுக்கும், எழுத வாய்ப்பளித்த உமா அக்கா அவர்களுக்கும்
நன்றி நன்றி நன்றி
14. படிப்பு படிப்பு என்று மட்டுமில்லாமல் அப்துல் கலாமின் வழியில் மரக்கன்றுகளை நடுவதோடு, அவற்றை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றனர். இதன் மூலம் பள்ளி வளாகம் பசுமை வளாகமாக மாறியுள்ளது.
12.அனைத்து மாணவர்களுக்கும் 1000 ரூபாய் மதிப்பிலான Abacus
kit Bag உடன் வாங்கி கொடுத்து Abacus பயிற்சி அளித்து வருகிறோம். திங்கள் கிழமைகளில் இப்பயிற்சி அளித்து வருகிறோம். அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள போட்டியில் பங்குபெற்று தங்களின் திறமைகளை நிருபிக்க காத்து கொண்டிருக்கின்றனர் எம்பள்ளி மாணவர்கள்.
11.வரைபடங்களை வரைபடத்தாளில் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலையை மாற்றி, விளையாட்டு மைதானத்திலும் செய்ய முடியும் என கோலமாவினைக் கொண்டு X அச்சு, Y அச்சு ஆகியவற்றை வரைந்து எண்களைக் குறித்து, மாணவர்களை இரு குழுக்களாகப் பிரித்து வரைபடங்களில் சரியான புள்ளியை குறிப்பது முதல் உருவங்கள் அமைத்தல், நேர்க்கோடுகள் வரைதல் போன்றவற்றை விளையாட்டு முறையில் கற்றுவருகின்றனர் எம்பள்ளி மாணவர்கள். இதுபோன்ற செயல்பாடுகளை ஒவ்வொரு ஆண்டு இறுதியலும் கணித திருவிழாவில் செய்ய வைப்பதன் மூலம் ஊர் பொதுமக்களின் நன்மதிப்பு பெற்று பள்ளி சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது.
13.படிக்கட்டிலும் படிப்போம்
என்று எங்கள் பள்ளியில் மாடி ஏறி செல்லும் படிக்கட்டில் வண்ணமடித்து தினமும் ஒவ்வொரு பாடத்ல் உள்ள முக்கியமான வார்த்தைகளை
எழதி படிக்கட்டில் ஏறும் போதும் இறங்கும் போதும் படிப்பதால் மாணவர்களின் சொற்களஞ்சியம் பெருகி திறம்பட தேர்வுகளை எழுதுகின்றனர்.
11. இவற்றுடன் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் வினாடி வினா நிகழ்ச்சி நடத்துவதோடு, செஸ், கேரம், கபடி, கொக்கொ, Spoken English,
தினம் ஒரு சோதனை தினந்தோறும் சாதனை என்ற பெயரில் அறிவியல் சோதனைகள் என பல துறைகளில் சிறப்படையும் வண்ணம் தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறோம்.