Wednesday, 9 March 2016

திரு.கணபதி

அசத்தும் அரசுப்பள்ளி ,            ஆசிரியர்களுக்கு ,                        அன்பு கலந்த வணக்கங்கள், P.கணபதி.,    PUPS பாதிரி , ஒலக்கூர் ஒன்றியம் , விழுப்புரம் மாவட்டம் .
   29.02.2008 ல் 30 மாணவர்கள் கொண்ட Pups காட்டுப்புஞ்சையில் ஆசிரியராக  பணியில் சேர்ந்தேன் பிரதான சாலையிலிருந்து தினமும் 6km மிதிவண்டியில் சென்று அடிப்படைத் தமிழையும் கணக்குகளையும் செய்யத் தெரியாமலிருந்த மாணவர்களை அரவனைத்து அவர்களாகவே படிக்குமளவிற்கு உருவாக்கினேன் ..
ஓராண்டில் நிகழ்ந்த இந்த மாற்றத்தை கண்ட AEEO திரு.குமார் அவர்கள் பாராட்டியது. எனக்கு ஊக்கமளித்தது ( முதல் பாராட்டல்லவா..)
02.06.2009 ல் PUPS பாதிரி பள்ளிக்கு மாறுதல் பெற்று.. H.m Mrs தமிழ்ச்செல்வி அவர்கள் கல்வி கற்பிப்பதில் முழு சுதந்திரம் கொடுத்தார்கள் ... மாணவர்கள் அடையவேண்டிய குறைந்தபட்ச கற்றல் அடைவுகளிலிருந்து மேன்மேலும் மெருகேறினார்கள்..
எந்த ஒரு VISIT என்றாலும் எம்பள்ளியும் தவறாமல் இடம் பெற்றது ..
2010 ல் ஒரு ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட்டு அன்று முதல் இன்று வரை ஆங்கிலமும் , கணிதமும் நான்கற்பிக்க.. தமிழ்,  அறிவியல் பாடங்களை மற்றொரு ஆசிரியராக கற்பித்து வருகிறோம் .. இது நல்லொதொரு மாற்றத்தை தருகிறது ( நாள் முழுவதும் ஒரு ஆசிரியர் என்பதை தவிர்க்க )
ஆங்கில பாடத்தை பொருத்தவரையில் முடிந்த வரை தமிழாக்கம் செய்து கற்பித்து வருகிறோம் .. அதன் விளைவு இன்று கணினியில் வரும் பாடங்களை எளிதில் பரிந்து விளையாடி கற்கிறார்கள் ..  Rhyming Words , Replace the Words , போன்ற செயல்பாடுகள் மூலம் ஆங்கிலம் கற்பிப்பதை உஊக்குவிப்கிறோம்..
கடந்தாண்டு முதல் Phonic method ( ஐயப்பன் சார்) ஐ பின்பற்றி சிறப்பானதொரு ஆங்கிலக் கல்வியை அளித்து வருகிறோம் ..
ஆங்கில பாடத்தில் NEW WORDS ஐ Syllable ஆக பிரித்து கற்பிப்பது நல்லொதொரு பலன்..
வாரத்திற்கு 50 இனைச்சொற்கள் (ENGLISH ) என மொத்தம் 1000� WORDS ஐ கற்பித்து வருகிறோம் (தனியாக TEST NOTE )
தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஏற்றவாறு  SINGULAR PLURAL , PAST TENSE , PRESENT TENSE , போன்றவற்றை கற்பித்து வருகிறோம் .. ஒரு SENTENCE ஐ கொடுத்தால் மூன்றாம் வகுப்பு மாணவர்கள் முதல் PAST ,PRESENT , FUTURE ஆ அடையாளப் படுத்துவார்கள்..( ing ,ed ,will be )
கணிதத்தை பொருத்தவரையில் மீண்டும் மீண்டும் பயிற்சியையே.. மேற்கொளகிறோம்.... நன்றாகவே கற்கண்டு போல் கற்கிறார்கள் .. புரியாத மாணவர்களுக்கு (MATHS KIT)
அறிவியல் பாடங்களை பொறுத்தவரையில் எளிய சோதனைகளையும் .. ஏன.. எதற்கு ..எப்படி... எதனாலே? எதனாலே....?போன்ற விளக்கங்கள் அடங்கிய செயல்பாடுகளை  செய்து வருகிறோம் .. (தமிழ்நாடு அறிவியல் இயக்க நூல்)
ஒவ்வொரு சுதந்திர தினம் , குடியரசு தின விழா ஊர்கூடி தேர் இழுப்பது போல் மிகச்சிறந்த வகையில் பாடல்கள்( பாரதியார் பாடல் +தேசப்பற்று பாடல்) ,நடனம் ,கதைகள் , போன்றவற்றை அரங்கேற்றி அசத்தி வருகிறார்கள் எம் மாணவர்கள் ..
DECEMBER 2015.. மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டம் .. குறிஞ்சிப்பாடி ஒன்றியம் மருவாய் தொடக்கப்பள்ளியில் பயிலும்  90 மாணவர்களுக்கு எம் பள்ளி மாணவர்கள் திரட்டிய 5250 ரூபாய்க்கு Pencil box, pen eraser , sharper , notebook , dresses , போன்றவற்றை (Jon  அண்ணா .. மூலம்..) அவர்களே நேரில் சென்று உதவியது நெ(ம)கிழ்ச்சியான... தருணம் ...
ஒன்றிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பரிசுகளையும் .. மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளிலும் கலந்து கொண்டு சிறப்பித்தது வருகிறார்கள் ..
ஐந்தாம் வகுப்பு முடித்த ... நலிந்த பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஒவ்வோராண்டும் ஒன்றிய அளவில்  நடைபெறும்  திறனறித் தேர்வில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மூன்று முறை வெற்றி பெற்று கள்ளக்குறிச்சியில் சிறந்த பள்ளிகளில் ஒன்றில் 6 ஆம் வகுப்பு முதல் அரசு செலவில் படித்து வருகிறார்கள் (12வகுப்பு வரை)
எளிய கதைகளை கூறி மாணவர்களையும் நடிக்க வைத்து மகிழ்வித்து வருகிறேன்..
What'sApp ல் வரும் கல்வி சம்பந்தமான பாடல்கள் ..பாடங்களை Print எடுத்து பயன்படுத்தி வருகிறோம் .. சில ஆசிரியர்களின் குரல்கள் (பாடல்கள் )இன்றளவும் எங்கள் பள்ளியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது
மூன்றாம் வகுப்பில் இரண்டு மாணவர்கள் (தீபக்,ஆகாஷ் ) 5,6 வகுப்பு ஆங்கில புத்தகங்களை சரளமாக வாசித்து அசத்துகிறார்கள .. விரைவில் அனைவரையும் படிக்க வைக்க.. முயற்சிகள் தொடர்கிறது ..
What's App ல் வந்த 100 ஆத்திச்சூடிகளை தமிழ் With ஆங்கிலம் ... ஒரு மாணவர் தமிழில் கேட்க மற்றொரு மாணவர் ஆங்கிலத்தில் அதனை கூறி வருகிறார்கள் ..
Hike Daily message ஐ.. சமயங்களில் எழுதி படித்து வருகிறார்கள் .. மூன்றாம் (வகுப்பு முதல் ..)
பழைய ABL முறைக்கல்வி.. எனக்கு பிடித்தமான கற்பிக்கும் முறைகளில் ஒன்று .. அதில்தான் மாணவர்களின் அபாரமான படித்தல் திறனைக் கண்டேன் .. (முதல் வகுப்பை மட்டும் முறையாக கற்பித்து விட்டால் போதும்) இன்றளவும் என் மாணவர்களுக்கு Old ABL ஆங்கில அட்டைகளை வாய்ப்புகள் அமையும்போதெல்லாம்.. பயன்படுத்தி வருகிறேன் ..For..increasing Vocabulary
சிறுக சிறுக கற்றல் .. முறையை பின்பற்றி வருகிறேன் .. அதாவது ஒரு நாளைக்கு ஒரு கேள்வி பதில்..or etc.. இது  மாணவர்களுக்கும் நமக்கும் எளிமையாக உள்ளது..
15.08.15 அன்று VEC மூலமாக 22000 ரூபாய் AHUJA SPEAKER , AMPLIFIER , MIC , பெறப்பட்டது ..இதனை  கணினியுடன் இணைத்து பாடங்களை மாணவர்கள் கற்பதை (MICல் படிப்பது..பேசுவது ) ஊர்மக்கள் அறியும் வண்ணம் செய்கிறோம்
சென்ற ஆண்டு பள்ளிக்கு பெயர்ப்பலகை 8000 ரூபாய் மதிப்பில் முன்னாள் மாணவர்கள் மூலமாக பெறப்பட்டது ...
சென்ற ஆண்டு மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் பயன்பாட்டிற்காக.. SMC மூலம் 10000 மதிப்பில் R.O Water Purifier பெறப்பட்டது ...
சில சான்றோர்கள் மூலமாக.. 6 மின்விசிறிகள் பெறப்பட்டுள்ளது..
கடந்த ஓராண்டாக கணினியை பயன்படுத்தி வருகிறேன் .. ASIM FRAMJI FOUNDATION CD களை மாணவர்கள் நன்கு பயன்படுத்தி கற்கிறார்கள்
FEAR FREE ENGLISH என்ற CD ஐ பயன்படுத்தி வருகிறோம் 1முதல் 5வகுப்பு வரை ஆங்கில பாடங்களை NOUN ,ADJECTIVE , PRONOUN, VERB, ADVERB CONJUCTION என பிரித்து தமிழ்+ஆங்கிலத்தில் VOICE உடன் உள்ளது (PPT) நன்றி அன்னபூர்ணா miss.. PUPS.. கந்தாடு.. மரக்காணம் ஒன்றியம் .. விழுப்புரம் மாவட்டம் ..
26.01.2016 அன்று 80,000 ரூபாய் மதிப்பில் ABL முறையில் படிப்பதற்கு 12TABLE , 06 BENCH (இரண்டு வகுப்பறைக்கு ) பரிசாக பெறப்பட்டது .
26.01.2016 அன்று 20,000 மதிப்பில் CPU ஒன்று திரு.எத்திராசு .. பாதிரி . அவர்களிடமிருந்து பரிசாக பெறப்பட்டது ( மொத்தம் ஒரு லட்சம் ) மாணவர்களின் பல்திறன் ஆற்றலை பார்த்து வியந்தவர் (குடியரசு தினத்தில் ) இது முதல் கட்ட உதவி என்று எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி சென்றுள்ளார் ...
இந்த சிறுவனின் (நான்தான் :))) கோரிக்கைகளை செவிசாய்த்து உதவி வரும் நல்லுங்களுக்கு எனது நன்றிகள் (கோடிகளில் )
என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் தலைமையாசிரியர் திருமதி .சத்தியவதி மற்றும் என்னுடன் பணியாற்றும் திருமதி G.U.கிறைஸ்டியன் நிஷா.. அவர்களுக்கும் நன்றிகள் .. என்னையும் இந்த குழுவில் சேர்த்துக்கொண்ட உமா அக்கா.. அண்ணாவிற்கும்  ( கோபால்) நன்றிகள் ..
உங்கள் அனைவரையும் எனக்கு அடையாளம் காட்டிய அண்ணன் ராஜேஷ் அவர்கள் என்றென்றும் என் மனதில் பெருமைக்குரியவர்  தங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்குமென நம்புகிறேன் ..
என்னோடு தோளோடு தோளாக இருந்து வரும் என் மனைவி ஜூலியட் .. நினைத்து பெருமைகொள்கிறேன்.. இவையனைத்தும் என்னுடைய அனுபவங்கள் மட்டுமே..சாதனைகள் அல்ல.. குறைகளை சுட்டிக்காட்டுங்கள் .. அக்கா.. அண்ணாக்களே..
இந்த எட்டு ஆண்டுகளில் நான்  செய்யத் தவறியதை சுட்டிக்காட்டினால் மகிழ்ச்சியடைவேன் தோழிகளே/தோழகர்களே
கடந்த SMC கூட்டத்தில் CRC அளவில் எம் பள்ளியை பற்றிய குறுந்தகடு ஓன்று ராஜேஷ் அண்ணன் உதவியுடன்  தயார் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது ..இதில் பள்ளி மாணவர்களின் செயல்பாடுகளும்.. ஒவ்வொரு பெற்றோர்கள் .. தன்னார்வலர்கள் எவ்வாறு பள்ளிக்கு உதவலாம் .. அவ்வாறு உதவினால் ... அரசுப்பள்ளிகள் தரம் கண்டிப்பாக உயரும் .. என்ற கருத்தை வலியுறுத்தி பெற்றோர்களுக்கும்  விழிப்புணர்வு ஏற்படுத்தினோம்... இந்த குறுந்தகடு பெற்றோர்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் நாங்களும் எங்கள் பள்ளிக்கு கண்டிப்பாக எங்களால் முடிந்ததை செய்து அடுத்த கூட்டத்தில் கண்டிப்பாக காட்டுகிறோம்.. என்று ஒவ்வொருவரும் எழுச்சியுடன் சென்றார்கள் ..


No comments:

Post a Comment